Tuesday, October 15, 2013

காதல் என்பது.................


                                                      
               தமிழ் சினிமா மிக நீண்ட காலமாக காதல் என்பது மிகப் புனிதமானது என்றும் ,அதற்காக உயிரையும் தியாகம் செய்ய தயங்க கூடாது என்பது போன்றும்,காதலை விட உயர்ந்தது  உலகில் இல்லை என்பது போன்றும்
மிகைப்படுத்தப்பட்ட வணிக ரீதியான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களை  உற்பத்தி செய்வதில் என்றுமே தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டுள்ளது.

சமீப காலமாக காதல் என்பது நேரத்தைக் கடத்த கல்லூரி,வேலைக்குச் செல்லும் பெண்கள் கையாலும் ஒரு யுத்தி என்பது போலவும், அத்தகைய காதலை மறக்க கதாநாயகன் டாஸ்மாக் சென்று சரக்கு அடித்து விட்டு பெண்கள் அல்லது காதலையே
திட்டி ஒரு பாடலுக்கு நடனமாடுவது போன்று வேறு ஒரு தவறான பிரச்சாரத்தை முன்வைக்கவும் தயங்கவில்லை.

சமூக நடப்பு என்ற பெயரில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் தவறான விசயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதை நாட்டின் மூலை முடுக்குக்கெள்ளாம் கொண்டு செல்வதை தமிழ் சினிமா இனிவரும் காலங்களிலாவது
நிருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

சினிமா என்பது நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருந்து வருகிறது, அதைப் அப்படியே நம்பும் ரசிகக் கூட்டம் நாள்தோறும் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய ஒரு படிநிலையை
சினிமாத் துரையினர் நல்ல விசயங்களைப் பரப்பும் பொருட்டு உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காக சினிமாத் துறையினர் தங்களது வியாபார ரீதியிலான வணிகத்தை தியாகம் செய்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்யும் சினிமாக்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத
அணுகுமுறையாகும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம் வணிக ரீதியில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்த போதிலும் காதல் என்றால் என்ன என்ற உளவியல் ரீதியான உண்மையை பலருக்கு எடுத்துரைக்கும்
படிப்பினையைத் தர முயன்றுள்ளது . வணிக ரீதியான ஒரு சினிமாவில் முடிந்த அளவிற்கு யதார்த்தமான விசயங்களை சொல்ல முயன்றதற்காக அட்லியை பாராட்டியேயாக வேண்டும்.
ஜெய் செய்யும் முதல் பாதி நகைச்சுவை சற்றே மிகைப்படுத்த காட்சிகளாக தோன்றும் போதிலும் ,முதல் படம் என்ற இயக்குனரின் பயத்தின் வெளிப்பாடே அந்த காட்சியமைப்புகள் என்றும் தோன்றுகிறது.

படத்தில் இயக்குனர் அட்லியின் முந்தைய குறும்படங்களின் தாக்கத்தை வெகுவாகவே பார்க்க முடிகிறது. மிகப்பெரிய பலமாக சந்தானம் தோற்றமளிக்கிறார். கதையின் முக்கிய வசனங்களைக் கூட இயக்குனர் சந்தானத்தின் மூலம் வெளிப்படுத்த
முயன்றுள்ளார். ஆர்யாவின் கண்கள் காதலுக்காக கலங்கும் போது ,பேசாமாலே பல பக்க வசனங்களை பேசுகிறார் மனிதர்.நயன்தாராவின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது, மறுபிரவேசத்திற்க்கு ஏற்ற நல்ல ஒரு கதையை தேர்ந்த்தெடுத்துள்ளார்.

முந்தைய காட்சியில் இளம்பெண்கள் காலையில் அழகாக இருப்பதில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த காட்சியில் நஸ்ரியாவை அதே சூழ்நிலையில் அறிமுகப்படுத்துவது , இயக்குனரின் டச்.
நஸ்ரியாவை அந்த பாத்திரத்திற்கு தேர்ந்த்தெடுத்தற்கு காரணம் கூட நஸ்ரியாவைப் பற்றிய இயக்குனரின் இந்த  எண்ணவோட்டமே காரணமாக இருக்கலாம்.

போடா என்று சொல்லும் இறுதி வசனத்தில் எல்லோருடைய மனதிலும் நின்று விடுகிறார் ஜெய்.

பின்னணி இசை எங்கேயோ கேட்ட குரலாகவே கேட்கிறது. படத்தின் நீளம் காரணமாக “அங்யாடே” பாடல் நீக்கப்பட்டுள்ளது ஜீ.வி யின் துரதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

நகைச்சுவை காட்சிகளை இன்னும் கூட குறைத்து விட்டு, காதல் காட்சிகளின் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

மொத்ததில் காதல் குறிஞ்சி மலராய் இருந்த போதிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அளவிற்கு அது அரிதான ஒரு விசயம் இல்லை, அது வாழ்வின் ஒரு இனிய அங்கம்,
துரதிர்ஷ்டவஷமாக யாரும் அதை இழக்க நேர்ந்த்தாலும், எல்லோருடைய வாழ்விலும் மீண்டும் அந்த குறிஞ்சி மலர் மலருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்,காதலுக்காக உயிரைக் குடுக்கவோ,
எடுக்கவோ வேண்டியதில்லை என்ற உளவியல் உண்மையை எளிதாக சொல்ல முயன்று ,வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் அட்லி.

           ” There is a life after love failure " When there is a life, definitly there will be a love which is inevitable.
   " There is a love after love failure "






     
   
 
 











































 
 







   



                        

No comments:

Post a Comment