Sunday, December 29, 2013

கவிஞன்

கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!
புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்
இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்
இவை தவ றாயின் எதிர்ப்பதென் வேலை
ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தலை அறிக
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்
பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்
நானே தொடக்கம் நானே முடிவு
நானுரைப் பதுதான் நாட்டின் சாட்ட
                                                   - கவியரசு கண்ணதாசன்

Thursday, December 26, 2013

பெரியாரும் விவேகானந்தரும்!

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்...

-விவேகானந்தர்

“சகோதரர்களே! நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்ராயங்கள்தாம் என்று சொல்வதோடு நான் ஒரு சாதரண மனிதன்தான். எவ்விதத் தன்மையும் பொருந்திய தீர்க்கதரிசியல்லன். ஆகையால் தனிமனிதன் என்கிற முறையில்தான் என்னுடைய அபிப்ராயங்களையும் – நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தாம் – எதிலும் எனக்குச் சரியென்று பட்டதைத்தான் உரைக்கிறேன். ‘ஒரு பெரியார் உரைத்துவிட்டார்’ என நீங்கள் கருதி அப்படியே கேட்டு நம்பிவிடுவீர்களானால் அப்போது நீங்கள் யாவரும் அடிமைகளே!… யார் உரைப்பதையும் நாம் கேட்டு ‘வேத வாக்கு’ என்று நம்பி நடப்பதால் தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கிறோம். ஆகவே நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கு அவை உண்மையென்று தோன்றினால் அவைகளை ஏற்றுக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்”
- பெரியார்

Monday, December 23, 2013

அலுவலகத்தில் ஒரு நாள்!

இன்று அலுவலகத்தில் நடந்த ஒரு விரும்பத்தகாத ஒரு நிகழ்வு, எங்களில் சிலரை சில நிமிடங்களுக்கு திக்கு முக்காட வைத்தது.

நாங்கள் பயந்த அளவிற்கு பெரிதாக எதுவும் நடந்து விடவில்லை! பதினைந்து நிமிட கணத்தில் பட்ட வருத்தத்தின் தாக்கத்தைத் தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியின் எல்லைக்கு இழுத்துச் சென்றது!


இது ஒரு புறம் இருக்கையில் இந்தச் சம்பவம் இரண்டு விடயங்களை முன்னே வைத்தது.

. பொறாமை கலந்த வாழ்த்துக்களையும், போலித்தனமான உதட்டுச் சிரிப்புகளையும் பரிமாறிக் கொள்ளும் அலுவலகச் சூழலில், உண்மையாகவே அடுத்தவரின் துன்பத்தை தன் துன்பமாகவும்,
 அடுத்தவரின் மகிழ்ச்சியைத் தங்களது மகிழ்ச்சியாகவும் எண்ணும் மனிதத்தை சில நிமிடங்கள் காண முடிந்த்தது.

. நகரத்தின் நுகர்வோர் கலாச்சாரத்தில் வாழ்ந்து பழகிவிட்டவர்களுக்கு அடுத்தவர்களின் கஷ்டங்கள் புரிவதில்லை என்றும், யாரும் யார்க்கும் நேரம் ஒதுக்க தயார் இல்லை என்றும்..... நகரங்களில் மனிதம்
 இறந்துவிட்டது என்றும் , வாதாடும் என் நண்பர்கள் சிலரிடத்தில் ”மனிதம் என்பது சூழலைப் பொறுத்து இல்லை, முழுவதுமாக சுயத்தைப் பொறுத்தது ”என்று நான் முன் வைக்கும்
 வாதத்தின் அடி நாதத்தை எடுத்துரைக்கும் வண்ணமாகவே அந்த நிகழ்வு அமைந்தது.

அன்பு, பாசம் , அக்கறை, பரிவு, இரக்கம் இவற்றை நாம் பிறரிடம் செல்த்துவதையும், மனிதத்தை வளர்ப்ப்பதிலும் சூழ் லைக்குச் சற்றே பங்கு இருந்த போதிலும் அது முற்றிலும் தனி மனிதனையும்,
அவனது மனத்தையும் சார்ந்தது.

இருக்கிறதோ, இல்லயோ என்று உறுதியாகச் சொல்ல இயலாத
யாரிடமும் நாம்  கேட்கவும் வேண்டாம், எதையும் தட்டவும் வேண்டாம்!
கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்,
திறங்கள் உங்களுக்குத் திறக்கப்ப்படும்!

நாம் அன்றாட வாழ்வின் சந்திக்கக் கூடிய பெரும்பாலான பிரச்சனை ஒரு மனிதனால், இன்னொரு மனிதனுக்கே உண்டாக்கப்படுகிறது.
மனிதனால் உண்டாக்கக் கூடிய பிரச்சனைகளுக்கு மனிதனே தீர்வைத் தேட வேண்டுமே தவிர மாற்று சக்தி அல்ல....

எனவே முடிந்த அளவிற்கு, மனிதம் காப்போம்.......

அது நமது பிரச்சனைகளைத் தடுத்து விடாது என்ற போதிலும், நல்ல மனித மனங்களை நம்மிடம் இழுத்து வந்து நமது பிரச்சனைக்கான தீர்வுகளயும் பெற்றுத் தர உதவும்.....


அன்பைக் கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்,
மனக்கதவுகளை திறங்கள் உங்களுக்காய் பல கதவுகள் திறக்கப்ப்படும்!






Saturday, November 16, 2013

விளையாட்டால் பிரபலமடைந்தவர்களுக்கு
மத்தியில் விளையாட்டை
பிரபலப் படுத்தியவன் நீ ,
பிரியாவிடையின் வலிகலந்த
நன்றிகளையும் ,
பிரியமான வாழ்த்துக்களையும்
சமர்ப்பிக்கின்றோம் சச்சின் .................

Tuesday, October 15, 2013

காதல் என்பது.................


                                                      
               தமிழ் சினிமா மிக நீண்ட காலமாக காதல் என்பது மிகப் புனிதமானது என்றும் ,அதற்காக உயிரையும் தியாகம் செய்ய தயங்க கூடாது என்பது போன்றும்,காதலை விட உயர்ந்தது  உலகில் இல்லை என்பது போன்றும்
மிகைப்படுத்தப்பட்ட வணிக ரீதியான காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களை  உற்பத்தி செய்வதில் என்றுமே தன்னை முன்னிலைப் படுத்திக்கொண்டுள்ளது.

சமீப காலமாக காதல் என்பது நேரத்தைக் கடத்த கல்லூரி,வேலைக்குச் செல்லும் பெண்கள் கையாலும் ஒரு யுத்தி என்பது போலவும், அத்தகைய காதலை மறக்க கதாநாயகன் டாஸ்மாக் சென்று சரக்கு அடித்து விட்டு பெண்கள் அல்லது காதலையே
திட்டி ஒரு பாடலுக்கு நடனமாடுவது போன்று வேறு ஒரு தவறான பிரச்சாரத்தை முன்வைக்கவும் தயங்கவில்லை.

சமூக நடப்பு என்ற பெயரில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் தவறான விசயங்களை கையில் எடுத்துக் கொண்டு அதை நாட்டின் மூலை முடுக்குக்கெள்ளாம் கொண்டு செல்வதை தமிழ் சினிமா இனிவரும் காலங்களிலாவது
நிருத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

சினிமா என்பது நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவே இருந்து வருகிறது, அதைப் அப்படியே நம்பும் ரசிகக் கூட்டம் நாள்தோறும் பெருகிக் கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய ஒரு படிநிலையை
சினிமாத் துரையினர் நல்ல விசயங்களைப் பரப்பும் பொருட்டு உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்காக சினிமாத் துறையினர் தங்களது வியாபார ரீதியிலான வணிகத்தை தியாகம் செய்துவிட்டு மக்களுக்கு நன்மை செய்யும் சினிமாக்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாத
அணுகுமுறையாகும்.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம் வணிக ரீதியில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்த போதிலும் காதல் என்றால் என்ன என்ற உளவியல் ரீதியான உண்மையை பலருக்கு எடுத்துரைக்கும்
படிப்பினையைத் தர முயன்றுள்ளது . வணிக ரீதியான ஒரு சினிமாவில் முடிந்த அளவிற்கு யதார்த்தமான விசயங்களை சொல்ல முயன்றதற்காக அட்லியை பாராட்டியேயாக வேண்டும்.
ஜெய் செய்யும் முதல் பாதி நகைச்சுவை சற்றே மிகைப்படுத்த காட்சிகளாக தோன்றும் போதிலும் ,முதல் படம் என்ற இயக்குனரின் பயத்தின் வெளிப்பாடே அந்த காட்சியமைப்புகள் என்றும் தோன்றுகிறது.

படத்தில் இயக்குனர் அட்லியின் முந்தைய குறும்படங்களின் தாக்கத்தை வெகுவாகவே பார்க்க முடிகிறது. மிகப்பெரிய பலமாக சந்தானம் தோற்றமளிக்கிறார். கதையின் முக்கிய வசனங்களைக் கூட இயக்குனர் சந்தானத்தின் மூலம் வெளிப்படுத்த
முயன்றுள்ளார். ஆர்யாவின் கண்கள் காதலுக்காக கலங்கும் போது ,பேசாமாலே பல பக்க வசனங்களை பேசுகிறார் மனிதர்.நயன்தாராவின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது, மறுபிரவேசத்திற்க்கு ஏற்ற நல்ல ஒரு கதையை தேர்ந்த்தெடுத்துள்ளார்.

முந்தைய காட்சியில் இளம்பெண்கள் காலையில் அழகாக இருப்பதில்லை என்று சொல்லிவிட்டு, அடுத்த காட்சியில் நஸ்ரியாவை அதே சூழ்நிலையில் அறிமுகப்படுத்துவது , இயக்குனரின் டச்.
நஸ்ரியாவை அந்த பாத்திரத்திற்கு தேர்ந்த்தெடுத்தற்கு காரணம் கூட நஸ்ரியாவைப் பற்றிய இயக்குனரின் இந்த  எண்ணவோட்டமே காரணமாக இருக்கலாம்.

போடா என்று சொல்லும் இறுதி வசனத்தில் எல்லோருடைய மனதிலும் நின்று விடுகிறார் ஜெய்.

பின்னணி இசை எங்கேயோ கேட்ட குரலாகவே கேட்கிறது. படத்தின் நீளம் காரணமாக “அங்யாடே” பாடல் நீக்கப்பட்டுள்ளது ஜீ.வி யின் துரதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

நகைச்சுவை காட்சிகளை இன்னும் கூட குறைத்து விட்டு, காதல் காட்சிகளின் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம்.

மொத்ததில் காதல் குறிஞ்சி மலராய் இருந்த போதிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் அளவிற்கு அது அரிதான ஒரு விசயம் இல்லை, அது வாழ்வின் ஒரு இனிய அங்கம்,
துரதிர்ஷ்டவஷமாக யாரும் அதை இழக்க நேர்ந்த்தாலும், எல்லோருடைய வாழ்விலும் மீண்டும் அந்த குறிஞ்சி மலர் மலருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்,காதலுக்காக உயிரைக் குடுக்கவோ,
எடுக்கவோ வேண்டியதில்லை என்ற உளவியல் உண்மையை எளிதாக சொல்ல முயன்று ,வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் அட்லி.

           ” There is a life after love failure " When there is a life, definitly there will be a love which is inevitable.
   " There is a love after love failure "






     
   
 
 











































 
 







   



                        

Thursday, September 12, 2013

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுத தூண்டியது
தங்க மீன்கள் திரைப் படத்தின் பாதிப்பு
========================================================
                                      அரைத்த மாவையே அரைத்து மார் தட்டிக் கொள்ளும் தலைவாக்களுக்கு மத்தியில் நிதர்சனமான ஒரு கதையை தேர்ந்த்தெடுத்து முயற்சித்திருக்கும் ராம் உண்மையில் பாராட்டுக்குரிய நபரே!!

ஒரு சில இடங்களில் காட்சி திணிப்பு தெரிந்த போதிலும் ஒரு ஆழமான கதையை வலுவாக சொல்ல முயன்றுள்ளார்.

படத்திற்க்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும்,விளம்பரத்தையும் தேடித்தந்த ”ஆனந்த யாழை” பாடழை முதல் பாடலாக வைத்து, வெற்றி பெற்ற பாடலை படத்தின் இறுதிப்பாடலாக வைத்து நம்மை பொறுமை இழக்கச் செய்யும்
வழக்கமான சினிமா ய்க்தியில் இருந்து வேறுபடும் ராம் முதல் காட்சியில் இருந்து நம்மை ஈர்க்க முய்ல்கிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், கேமராக்களின் லென்சுகள் சிறுமி சாதனாவின் கண்களாகவே தோன்றுகிறது, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் கூட குழந்தை பேசும் சிறு வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புக்களின் மூலம் சொல்ல முயன்றுள்ளார்.

மிகவும் ஏழ்மை, பள்ளிக்கு கட்டணம் செலுத்துவதற்கு கூட வழி இல்லாத நிலையில்,மகள் விரும்பும் ஒரு நாய்க்குட்டிக்காக ஏன் இவ்வளவு மெனெக்கெடுகிறார், என்று நாம் எரிச்சலுரும் பொழுது , தன் தங்கையிடம் அதை விவரித்து அந்த காட்சியின் நோக்கதை
தெளிவாக உணர்தியுள்ளார்.

பூரிக்காக ஒரு நாள் இறப்பை தள்ளிப் போடும் சிறுமி, படம் முழுவதும் இயல்பான நடிப்பை வெளிப்படுதியிருக்கும் பூ ராம், பாட்டியாக வரும் ரோகினி, இயல்பான குடும்ப பெண்ணாகவும்,பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
தன் குடும்பம் மற்றும் குழந்தையை  தவிர வேறு எதுவுமே பெரிதாக தெரியமால் வாழ்ந்து கொண்டு இறுக்கும் பல குடும்ப பெண்களின் பிரதிபலிப்பாக தெரியும் , கல்யாணியின் மனைவி மன்னிக்கவும் செல்லாம்மாவின் அம்மாவாக வறும் ஷெல்லி என்று
அனைவரின் நடிப்பும் நிட்சயம் பாரட்டக்கூடியவையே.

செல்லாம்மவின் பாத்திரமாகவே வாழ்ந்து நிஜத்தில் மித மிஞ்சிய திறமையை வெளிப்படுத்தியுள்ள சாதனா படத்தில் சற்று அறிவுக்கூர்மை குறைந்த சிறுமியாகவே வாழ்ந்து படம் முடிந்த பிறகும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறாள்.!

படத்தினை இன்னொரு கட்டத்திற்கு இழுத்து செல்லாமல் இருப்பதற்கு சில காரணங்களும் இருக்கவே செய்கின்றன. முதலாவது யுவனின் பலவீனமான பின்னணி இசை, இரண்டாவது ஒரு சில இடங்க்ளில் தெரியும் ராமின் மிகையான நடிப்பு.

இவர் தன் குழந்தைக்காக படும் பாட்டை காட்டும் காட்சிகளில் எல்லாம் அய்யோ பாவம் என்று தோன்றாமல் எரிச்சல் வருவதற்கான காட்சிகளாய் மாறிப்
போனதால் , நான் உனக்கு ஏதுமே பண்ணலையே ஏன் இப்படி என் மேல பாசத்தை வைக்கிறே என்று ராம் ஓவென கதறி அழும் போது சரி போதும் ஓவராயிருக்குனு சொல்லத் தோன்றுகிறது.

யதார்த்தமில்லா வாழ்க்கை முறை கொண்டவனை நாயகனாய் வைத்து எடுக்கப்படும் கதைகள்  மூலமாய் சொல்லப்படும் விஷயங்கள் எப்போதும் மக்கள் மனதில் நிற்பதில்லை, என்பதை ராம் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணவே தோன்றுகிறது.!

ஒரு சில குறைகள் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தங்க மீன்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க கூடாத ஒரு சில படங்களில் ஒன்று தான்!!!!

படத்தின் கதையை சொல்லிவிடும் கீழே உள்ள பாடல் வரிகள் , இதனையே செல்லம்மாவின் வழியாக பிரதிபலிக்க முயன்றுள்ளார் இயக்குனர் ராம் என்றால் அது மிகையாகாது !


"மலர் ஒன்று விழுந்தால்
அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் விழுந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை
இலை போல என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்"





Tuesday, April 16, 2013

வாழ நீனைத்தால் வாழலாம்...........



நான் விட்ட கண்ணீரை திரும்பிப் பார்க்கிறேன்..
அதில் நீ இல்லை..
ஆனால் என் சிரிப்பை சற்றே திருப்பிப் பார்க்கிறேன்...
அதில் நீ மட்டுமே...
அதை நினைக்கும்போதுதான்
 கண்ணில் முட்டுகிறது கண்ணீர்.


Sunday, April 14, 2013

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.