Thursday, September 12, 2013

பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் எழுத தூண்டியது
தங்க மீன்கள் திரைப் படத்தின் பாதிப்பு
========================================================
                                      அரைத்த மாவையே அரைத்து மார் தட்டிக் கொள்ளும் தலைவாக்களுக்கு மத்தியில் நிதர்சனமான ஒரு கதையை தேர்ந்த்தெடுத்து முயற்சித்திருக்கும் ராம் உண்மையில் பாராட்டுக்குரிய நபரே!!

ஒரு சில இடங்களில் காட்சி திணிப்பு தெரிந்த போதிலும் ஒரு ஆழமான கதையை வலுவாக சொல்ல முயன்றுள்ளார்.

படத்திற்க்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பையும்,விளம்பரத்தையும் தேடித்தந்த ”ஆனந்த யாழை” பாடழை முதல் பாடலாக வைத்து, வெற்றி பெற்ற பாடலை படத்தின் இறுதிப்பாடலாக வைத்து நம்மை பொறுமை இழக்கச் செய்யும்
வழக்கமான சினிமா ய்க்தியில் இருந்து வேறுபடும் ராம் முதல் காட்சியில் இருந்து நம்மை ஈர்க்க முய்ல்கிறார்.

படத்தின் ஒவ்வொரு காட்சியிலும், கேமராக்களின் லென்சுகள் சிறுமி சாதனாவின் கண்களாகவே தோன்றுகிறது, சமுதாய ஏற்றத் தாழ்வுகளைக் கூட குழந்தை பேசும் சிறு வசனங்கள் மற்றும் காட்சி அமைப்புக்களின் மூலம் சொல்ல முயன்றுள்ளார்.

மிகவும் ஏழ்மை, பள்ளிக்கு கட்டணம் செலுத்துவதற்கு கூட வழி இல்லாத நிலையில்,மகள் விரும்பும் ஒரு நாய்க்குட்டிக்காக ஏன் இவ்வளவு மெனெக்கெடுகிறார், என்று நாம் எரிச்சலுரும் பொழுது , தன் தங்கையிடம் அதை விவரித்து அந்த காட்சியின் நோக்கதை
தெளிவாக உணர்தியுள்ளார்.

பூரிக்காக ஒரு நாள் இறப்பை தள்ளிப் போடும் சிறுமி, படம் முழுவதும் இயல்பான நடிப்பை வெளிப்படுதியிருக்கும் பூ ராம், பாட்டியாக வரும் ரோகினி, இயல்பான குடும்ப பெண்ணாகவும்,பன்னிரெண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து
தன் குடும்பம் மற்றும் குழந்தையை  தவிர வேறு எதுவுமே பெரிதாக தெரியமால் வாழ்ந்து கொண்டு இறுக்கும் பல குடும்ப பெண்களின் பிரதிபலிப்பாக தெரியும் , கல்யாணியின் மனைவி மன்னிக்கவும் செல்லாம்மாவின் அம்மாவாக வறும் ஷெல்லி என்று
அனைவரின் நடிப்பும் நிட்சயம் பாரட்டக்கூடியவையே.

செல்லாம்மவின் பாத்திரமாகவே வாழ்ந்து நிஜத்தில் மித மிஞ்சிய திறமையை வெளிப்படுத்தியுள்ள சாதனா படத்தில் சற்று அறிவுக்கூர்மை குறைந்த சிறுமியாகவே வாழ்ந்து படம் முடிந்த பிறகும் நம் கண்களை விட்டு அகல மறுக்கிறாள்.!

படத்தினை இன்னொரு கட்டத்திற்கு இழுத்து செல்லாமல் இருப்பதற்கு சில காரணங்களும் இருக்கவே செய்கின்றன. முதலாவது யுவனின் பலவீனமான பின்னணி இசை, இரண்டாவது ஒரு சில இடங்க்ளில் தெரியும் ராமின் மிகையான நடிப்பு.

இவர் தன் குழந்தைக்காக படும் பாட்டை காட்டும் காட்சிகளில் எல்லாம் அய்யோ பாவம் என்று தோன்றாமல் எரிச்சல் வருவதற்கான காட்சிகளாய் மாறிப்
போனதால் , நான் உனக்கு ஏதுமே பண்ணலையே ஏன் இப்படி என் மேல பாசத்தை வைக்கிறே என்று ராம் ஓவென கதறி அழும் போது சரி போதும் ஓவராயிருக்குனு சொல்லத் தோன்றுகிறது.

யதார்த்தமில்லா வாழ்க்கை முறை கொண்டவனை நாயகனாய் வைத்து எடுக்கப்படும் கதைகள்  மூலமாய் சொல்லப்படும் விஷயங்கள் எப்போதும் மக்கள் மனதில் நிற்பதில்லை, என்பதை ராம் போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணவே தோன்றுகிறது.!

ஒரு சில குறைகள் தவிர்த்து விட்டுப் பார்த்தால் தங்க மீன்கள் தமிழ் சினிமாவில் தவிர்க்க கூடாத ஒரு சில படங்களில் ஒன்று தான்!!!!

படத்தின் கதையை சொல்லிவிடும் கீழே உள்ள பாடல் வரிகள் , இதனையே செல்லம்மாவின் வழியாக பிரதிபலிக்க முயன்றுள்ளார் இயக்குனர் ராம் என்றால் அது மிகையாகாது !


"மலர் ஒன்று விழுந்தால்
அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் விழுந்தால் சருகாகும்
வறியவன் வாழ்க்கை
இலை போல என்றபோதிலும்
சருகுகள் ஒரு நாள் உரமாகும்"





1 comment: